2016ஆம் ஆண்டு இயக்குநர் தருண் பாஸ்கர், விஜய் தேவரகொண்டாவை ஹீரோவாக வைத்து இயக்கிய படம் 'பெல்லி சூப்புலு'. இப்படம் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
இதனையடுத்து இப்படத்தின் தமிழ் பதிப்பில் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஏ ஸ்டுடியோஸ் எல்.எல்.பி, ஹவிஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்குகிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.
இன்னும் தலைப்பை அறிவிக்காத இப்படம் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளாத படக்குழு அறிவித்துள்ளது. இதனை ஹரிஸ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வாட்ட எ டீம்...வாட் எ ஃபன்...எனது பெஸ்டி கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் நானும் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் நடித்ததில் எனக்கு சந்தோஷம் அருமையான குழு. விரைவில் படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிங்க: ரசிகனுக்கு சிறந்த பொழுதுபோக்கைத் தர போராடுபவன் நான் - விஜய் தேவரகொண்டா