தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தமிழ்ப் புத்தாண்டு: ஓடிடியில் வெளியாகியுள்ள புதிய படங்கள்! - அமேசான் பிரைம்

சென்னை: தமிழ் புத்தாண்டான நேற்று (ஏப்.14) ஓடிடி தளங்களில் புதிய படங்கள் வெளியாகியுள்ளன.

ஓடிடியில் வெளியாகியுள்ள புதிய படங்கள்!
ஓடிடியில் வெளியாகியுள்ள புதிய படங்கள்!

By

Published : Apr 15, 2021, 1:02 PM IST

தமிழ்ப் புத்தாண்டு நாளான நேற்று (ஏப்.14) ஓடிடி தளங்களில் புதிய படங்கள் வெளியாகியுள்ளன. அவை குறித்த விவரங்கள் பின்வருமாறு:

ஹாட்ஸ்டார் - பரமபதம் விளையாட்டு

த்ரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு திரைப்படம் வெளியாகி உள்ளது.

த்ரிஷா நடித்த பரமபதம் விளையாட்டு
த்ரிஷா, நந்தா, ரிச்சர்ட் நடிப்பில் கே. திருஞானம் இயக்கியுள்ள திரைப்படம் ’பரமபதம் விளையாட்டு’. த்ரிஷாவின் 60ஆவது படமான இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியாகவிருந்த இந்தப் படத்தின் வெளியீடு பல்வேறு காரணங்களால் தாமதமானது. இந்நிலையில், தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் நேரடியாக வெளியாகியுள்ளது.
நெட்பிளிக்ஸ் - உப்பென்னா
விஜய் சேதுபதி நடித்துள்ள தெலுங்கு படமான உப்பென்னா (Uppena) வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடித்த தெலுங்குப் படம் - உப்பென்னா
விஜய் சேதுபதி,வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடிப்பில், புஜ்ஜி பாபு இயக்கிய உப்பென்னா படம், கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியானது. அதிக அளவில் வசூலித்த இந்தப் படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் பிரைம் - தி பிரீஸ்ட்
மம்மூட்டி, மஞ்சு வாரியர், நிகிலா, விமல் நடிப்பில் ஜோஃபின் டி. சாக்கோ இயக்கியுள்ள படம் ’தி பிரீஸ்ட்’ (The Priest).
மம்முட்டி நடிப்பில் வெளியான தி பிரீஸ்ட்
கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், தற்போது அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
ஜீ 5 - மதில்
பிரபல இயக்குநரும் நடிகருமான கே.எஸ். ரவிகுமார் நடித்துள்ள படம் ’மதில்’ ஜீ 5 தளத்தில் நேற்றைய தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியுள்ளது.
இயக்குநரும் நடிகருமான கே.எஸ். ரவிகுமார் நடித்துள்ள படம் மதில்.
லாக்கப், க/பெ. ரணசிங்கம், முகிலன், ஒரு பக்க கதை ஆகிய படங்கள் ஜீ5 ஓடிடியில் நேரடியாக வெளியாகின. இதையடுத்து மதில் என்கிற படமும் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. கே.எஸ்.ரவிகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்தப் படத்தை எஸ்.எஸ். குழுமத்தின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். மைம் கோபி, பிக்பாஸ் புகழ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க:பிரமாண்டமாக வெளியான அருண் விஜய்யின் பார்டர் பட ஃபர்ஸ்ட்லுக்!

ABOUT THE AUTHOR

...view details