பருத்தி வீரன், தென்மேற்கு பருவக்காற்று, மேற்குதொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள் படங்களின் வரிசையில் 'தொரட்டி' படம் உருவாகியுள்ளது. மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஷமன் மித்ரு, சத்யகலா, அழகு, முத்துராமன், சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அழிந்து வரும் ஒரு விவசாய சமூகத்தின் கதையை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஷமன் பிக்சர்ஸ் சார்பில் ஷமன் மித்ரு தயாரித்துள்ள இப்படத்திற்கு வேத் சங்கர் சுகவனம் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான 'தொரட்டி' படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறது. புதுமுகங்களை கொண்டு இயக்கப்பட்டுள்ள இப்படம் யதார்த்த மனிதர்களின் வாழ்வியலையும், வலிகள் நிறைந்த கதாப்பாத்திரங்களோடு வெளிவந்துள்ளது படத்தின் டிரைலர். இப்படத்தில் நடிகை சத்யகலாவின் நடிப்பை பார்த்தால் முதல் படம் போன்று தெரியவில்லை மனதில் நிற்கிறார்.