சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் சென்னையில் இன்று (பிப். 27) நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் இயக்குநர் பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணியும், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தலைமையிலான அணியும் போட்டியிடுகின்றனர்.
இயக்குநர் சங்கத் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு! - tamil film directors association
இயக்குநர் சங்கத் தேர்தல் இன்று (பிப். 27) சென்னையில் நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சங்கத் தேர்தல்
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆயிரத்து 883 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள். அஞ்சல் மூலமாக 106 பேர் வாக்களித்துள்ளனர். மாலை 4 மணிக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: ’மன்மத லீலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!