தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இயக்குநர் ராஜ்கபூரின் 23 வயது மகன் திடீர் மரணம்! - director rajkapoor son died

இயக்குநர் ராஜ்கபூரின் 23 வயது மகன் இன்று உடல்நலக்குறைவு காரணமாக, மெக்காவில் உயிரிழந்துள்ளார்.

இயக்குநர் ராஜ்கபூரின் 23வது மகன் திடீர் மரணம்
இயக்குநர் ராஜ்கபூரின் 23வது மகன் திடீர் மரணம்

By

Published : Feb 17, 2020, 11:28 PM IST

தமிழ் சினிமாவில் 'தாலாட்டு கேட்குதம்மா' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்கபூர். இதையடுத்து, அஜித்தின் ஆனந்த பூங்காற்றே, அவள் வருவாளா உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார். இவர் படங்கள் மட்டுமின்றி, ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

ராஜ்கபூருக்கு 23 வயதில் ஷாரூக் கபூர் என்ற மகன் இருந்தார். ஷாருக், சமீபத்தில் தனது தாய் சாலீஜா கபூருடன் மெக்காவுக்கு சென்று இருந்தார். அங்கு கடும் குளிர் காரணமாக, ஷாரூக் கபூருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சாதாரண காய்ச்சல் என்று சாலீஜா நினைத்து கொண்டு இருந்த நிலையில், திடீரென்று இன்று ஷாரூக் கபூர் உயிரிழந்தார்.

ராஜ்கபூர் மகன் ஷாருக் கபூர்

ஷாரூக் கபூரின் திடீர் மறைவு அவரது குடும்பத்தை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ராஜ்கபூர் தனது மகனின் உடலை சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் மெக்காவில் இருந்து ஷாரூக் கபூரின் உடலை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:ஏலியனுடன் ஜாலியாக குச்சி மிட்டாய் சாப்பிடும் சிவகார்த்திகேயன்!

ABOUT THE AUTHOR

...view details