நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து இன்று(டிசம்பர்.08) தனது 63ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 1958ஆம் ஆண்டு டிசம்பர் 08ஆம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்தார். 1987ஆம் ஆண்டு வெளியான ’நேரம் நல்லா இருக்கு’ என்னும் திரைப்படத்தில் நகைச்சுவை வேடங்களில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார்.
1997ஆம் ஆண்டு வெளியான ’சூர்ய வம்சம்’, 1999ஆம் ஆண்டு வெளியான ’நீ வருவாய் என’, ’ராஜா ராணி’, 2007ஆம் ஆண்டு ’மா மதுரை’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.