தமிழ்த் திரைப்படத்துறையினர் பலர் தொடர்ந்து உயிரிழந்துவருகின்றனர். இது தமிழ் திரைத் துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விவேக்கின் இறப்பைத் தொடர்ந்து, பாண்டு, கே.வி.ஆனந்த், மாறன், நெல்லை சிவா, ஜோக்கர் துளசி என, பலர் உயிரிழந்துள்ளனர்.
அந்தவரிசையில் நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்றே உயிரிழந்துள்ளார். ஆனால் சமீபத்தில் தான் அவர் உயிரிழந்த சம்பவம் தெரியவந்திருப்பது பெரும் சோகம். இயக்குநர் பாலசந்தரின் ஜாதிமல்லி திரைப்படம் மூலமாக அறிமுகமான இவர், ஆறு, சதுரங்க வேட்டை, காக்கி சட்டை உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.