தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிக் பாஸ் வின்னர் ஆரவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - மார்கெட் ராஜா பட ரிலீஸ் தேதி

தாதா, டாக்டர் என இரு மாறுபட்ட வேடங்களில் பிக் பாஸ் வின்னர் ஆரவ் நடித்து, இயக்குநர் சரண் இயக்கியிருக்கும் படம் மார்கெட் ராஜா. பிக் பாஸ் முதல் சீசனின் வெற்றிபெற்ற பின்னர் தற்போது இரண்டு சீசன்கள் நிறைவுற்ற நிலையில் ஆரவ்வின் முதல் படம் வெளியாகவுள்ளது.

ஆரவ் நடித்துள்ள மார்கெட் ராஜா திரைப்படம்

By

Published : Nov 12, 2019, 3:25 PM IST

சென்னை: ஆக்‌ஷன், திகில், காமெடி, காதல் என அனைத்தும் கலந்த கலவையாக உருவாகியிருக்கும் மார்கெட் ராஜா பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சரண் இயக்கத்தில் ஆரவ் - காவ்யா தபார் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் படம் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ். நடிகை ராதிகா சரத்குமார், ரோகிணி, நாசர், நிகிஷா படேல், ஆதித்யா, தேவதர்ஷினி, பாகுபலி புகழ் பிரபாகர், முனீஷ்காந்த், சாயாஜி ஷிண்டே, பிரதீப் ராவத், சாம்ஸ் உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்திருக்கின்றனர்.

இதையடுத்து படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, படம் நவம்பர் 29ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சுரபி ஃபிலிம்ஸ் மோகன் கூறியதாவது:

தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி, இயக்குநர் சரண் வெகுஜன ரசனைக்கேற்ற வகையில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தை உருவாக்கியிருப்பதைப் பார்த்து மகிழச்சியடைகிறேன். படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை அனைவரும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.

தனித்துவம்வாய்ந்த உடல் மொழி, மேனரிசம், ஆகியவற்றுடன் இரண்டு வகையான வேடங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன். சில சமயங்களில் இரண்டு வகையான பாத்திரங்களையும் ஒரே நாளில் படமாக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோதுகூட சிறப்பாக நடித்திருந்தார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details