தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாலிவுட்டில் அறிமுகமாகும் ஜீவா! - bollywood debut

1983-ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்படும் பாலிவுட் திரைப்படத்தில் தமிழ் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளார்.

நடிகர் ஜீவா

By

Published : Feb 1, 2019, 9:30 AM IST

1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனை பல ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்படமாக எடுக்கவுள்ளார் இயக்குநர் கபீர் கான்.

இதில் ரன்வீர் சிங், கபில் தேவ் கதாபாத்திரத்திலும், பஞ்சாபி நடிகர் அமி விர்க் பால்விந்தர் சிங் சந்து கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் புதிய இணைப்பாக ஜீவா சேர்ந்துள்ளார். இந்த '83' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆகவுள்ளார் ஜீவா. இதில் இவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இதுகுறித்து, பேசிய ஜீவா, இவ்வேடத்திற்காக 7 கிலோ எடை குறைக்க வேண்டியுள்ளது, அதனால் கடந்த சில மாதங்களாக பயிற்சி எடுத்து வருகிறேன் என்று தெரிவித்தார்.

படத்தின் தயாரிப்பாளர் மது மந்தேனா கூறுகையில், ஜீவா நடித்த 'கோ' திரைப்படத்தைப் பார்த்துள்ளேன். அதை ஹிந்தியில் ரீமேக் செய்யவேண்டும் என்று நினைத்தேன். தற்போது ஜீவாவுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க, ஜீவாவை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க முடியாது என்று கூறினார்.

திரைக்கு பின்னாலும் ஜூவாவிற்கு கிரிக்கெட் மேல் ஆர்வம் அதிகம். இவர் பல முறை நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details