நடிகர் விஜய்சேதுபதியின் 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில்'பிரண்டு லவ் மேட்டரு பீல் ஆகிட்டப்லா, ஆஃப் சாப்பிட்ட கூல் ஆகிடுவாரு' என்ற வசனத்தின் மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் டேனியல் ஆனி போப். இதன்பின் டேனியல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் மேலும் பிரபலமானார்.
இதையடுத்து டேனியல் தனது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பள்ளி பெண்களை குறிவைத்து ஆபாசமாக உரையாடும் புகைப்படங்கள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேசன் சாமுவேல் என்ற நபர் தனது சமூக வலைதள பக்கத்தில், நடிகர் டேனியல் இளம்பெண்களிடம் தாமாக முன்வந்து ஆபாசமாக பேசி வருவதாக கூறி அந்த உரையாடலை பகிர்ந்துள்ளார்.
மேலும், தன்னை ஒரு நடிகராக இளம்பெண்களிடம் அறிமுகமாக்கிக் கொள்ளும் டேனியல், அவர்களை தனது வலையில் விழ வைத்து ஆபாசமாக பேசி வருகிறார். அவர்கள் அச்சத்தால் இதுபற்றி புகார் கொடுக்க முன்வர தயங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி நடிகர் டேனியில் இன்ஸ்டாகிராமில் பேசி, இளம்பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக அவரது அறையில் சந்தித்து, பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பாதிக்கப்பட்ட பெண் பேசிய ஆடியோவையும் ஜேசன் சாமுவேல் வெளியிட்டார்.