தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'நான் அதிக சம்பளம் கேட்கிறேனா?' - விளக்கமளித்த தமன்னா - அதிக சம்பளம் கேட்பது குறித்து விளக்கம் அளித்த தமன்னா

தான் அதிக சம்பளம் கேட்பதாக பரவி வரும் வதந்திக்கு விளக்கமளித்துள்ளார் நடிகை தமன்னா.

Tamannah clarifies on demanding huge amount for ravi teja movie
Tamannah clarifies on demanding huge amount for ravi teja movie

By

Published : May 22, 2020, 3:58 PM IST

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் நடிப்பில் 'ஆக்ஷன்', 'பெட்ரோமாக்ஸ்' என்ற இரு படங்கள் கடைசியாக வெளியானது. சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்க தமன்னா அதிக சம்பளம் கேட்பதாக தகவல் வெளியானது.

தற்போது 'க்ராக்' திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் ரவி தேஜா நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்காக தமன்னாவை அணுகியபோது, அவர் 2.5 முதல் 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக கூறப்பட்டது. தயாரிப்பாளருடன் நல்ல நட்புறவுடன் தமன்னா இருப்பார் என்று பலராலும் கூறப்பட்ட நிலையில், இந்த செய்தி பலருக்கும் வியப்பாகவே இருந்தது.

தயாரிப்பாளருக்கு நெருக்கடியான வேளைகளில் தன்னுடை.ய சம்பளம் குறித்து தமன்னா கேட்கமாட்டார். மேலும் ஆடம்பரமான பொருள்களை கேட்கமாட்டார் என்றும், வீண் செலவுகள் வைக்கமாட்டார் என்றும் தமன்னாவுக்கு திரைத்துறையினரிடையே நன்மதிப்புஇருந்தது.

தமன்னா

தற்போது அவர் அதிக சம்பளம் கேட்கிறார் என்னும் செய்தி காதில் விழவே, அதற்கு பதிலளித்துள்ளார் தமன்னா. என் மார்கெட் எப்படி இருக்கிறது என்று எனக்கு தெரியும், அதிகமான சம்பளத்தை நான் கேட்டதில்லை என விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிங்க... தெலுங்கு படத்துக்காக தீவிர ஃபிட்னஸ் பயிற்சியில் தமன்னா

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details