திரைப்படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பெரும்பாலானோர் முன்பு எல்லாம் சின்னத்திரையில் நடிக்கவோ, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவோ தயக்கம் காட்டுவார்கள்.
ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் பெரும்பாலான நடிகர், நடிகைகள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டனர். கமல் ஹாசன் தொடங்கி விஜய்சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருகின்றனர்.