சம்பத் நேன்டி இயக்கும் அடுத்தப் படத்தில் நடிகர் கோபி சந்த்துக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் கபடி கோச்சாக தான் நடிப்பதாக தமன்னா குறிப்பிட்டுள்ளார். படத்தில் ஓட்டப்பந்தய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ள தமன்னா, சிறு வயதில் விளையாட்டு வகுப்புகளை கட் அடித்துவிடுவாராம்.
இதுகுறித்து தமன்னா கூறுகையில், பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மிகவும் சிரமமாகவும் சவாலாகவும் இருப்பதாக குறிப்பிட்டார். இப்படத்தில் நடிப்பதன் மூலம் புதிய அனுபவம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட தமன்னா, படத்தில் தன் புதிய லுக் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்.
இதையும் படிங்க: ஜெயம் ரவியின் தங்கையாகிய த்ரிஷா!