நடிகர் ஆயுஷ்மன் குர்ரானா, நடிகைகள் தபு, ராதிகா ஆப்தே உள்பட பலர் நடித்து இந்தியில் ஹிட்டான படம், 'அந்தாதுன்'. பிளாக் காமெடி கிரைம் த்ரில்லராக உருவான இந்தப் படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார். கடந்த ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசியத் திரைப்பட விருதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை ஆகிய மூன்று பிரிவுகளில் இப்படம் விருது வாங்கியது.
அதேபோல் மெல்போர்ன் திரைப்பட விழாவிலும் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த படம் ஆகிய பிரிவுகளிலும் இப்படம் விருது வாங்கியது. இதனையடுத்து இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. தற்போது இப்படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தெலுங்கு ரீமேக்கில் நித்தின் கதாநாயகனாக நடிக்க உள்ளார். தபு நடித்த வேடத்தில் தமன்னாவும் ராதிகா ஆப்தே நடித்த வேடத்தில் நபா நடேஷும் நடிக்க உள்ளனர்.
'அந்தாதுன்' தெலுங்கு ரீமேக்கில் நடிகை தமன்னா - தமன்னா லேட்டஸ்ட் செய்திகள்
சென்னை : 'அந்தாதுன்' தெலுங்கு ரீமேக்கில் தமன்னா - நபா நடேஷ் ஆகியோர் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகி உள்ளது.
Tamannaah
பிளாக் காமெடி கிரைம் த்ரில்லர் படமான இந்தப் படத்திற்கு வசனம் எழுதி இயக்குகிறார் மெர்லபகா காந்தி. இசை மஹட்டி ஸ்வர சாகர். ஒளிப்பதிவு ஹரி கே வேதாந்த். மற்ற டெக்னீஷியன்கள், நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் இனி வரும் காலங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.