ஹைதரபாத்: தெலுங்கில் உருவாகி வரும் 'சீட்டிமார்' படத்துக்காக தீவிர ஃபிட்னஸ் பயிற்சியில் ஈடுபட்டுள்ளாராம் நடிகை தமன்னா.
தமிழ், தெலுங்கு சினிமாக்களில் 15 ஆண்டுகளாக ஹீரோயினாக கலக்கிவருகிறார் தமன்னா. மாஸ் மசாலா திரைப்படங்கள், கிராமத்து பின்னணி குடும்பத் திரைப்படங்கள், காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் என அனைத்து விதமான திரைப்படங்களிலும் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
இதையடுத்து தற்போது கபடி விளையாட்டை மையமாக வைத்து 'சீட்டிமார்' என்ற தெலுங்கு படத்தில் நடித்துவருகிறார் தமன்னா. படத்தில் அவர் கபடி வீராங்கனையாகவும், பயிற்சியாளராகவும் தோன்றவுள்ளார். இதையடுத்து அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு, விளையாட்டு வீராங்கனை போல் கட்டுக்கோப்பான உடலை பெறுவதற்கு தீவிர பிட்னஸ் பயிற்சியில் அவர் ஈடுபட்டுள்ளாராம்.
சைவ சாப்பாடு, உடற்பயிற்சி, தானியங்கள் இல்லாத உணவுகள் என அவர் தனது உணவு முறையை மாற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.