அஜித் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், 'வேதாளம்'. சிறுத்தை சிவா இயக்கிய இந்த படத்தில் அஜித்திற்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். மேலும் ஸ்ருதி ஹாசன், சூரி, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. மெஹர் ரமேஷ் இயக்கும் இப்படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார்.
தெலுங்கில் இப்படத்திற்கு 'போலா சங்கர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்நிலையில், ஸ்ருதிஹாசன் கதாபாத்திரத்திற்கு தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.