ஆன்லைனில் கல்வி கற்க ஸ்மார்ட்போன் கேட்ட மாணவி ஒருவருக்கு நடிகை டாப்ஸி ஐ போன் வாங்கி கொடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அந்த மாணவியும், அவரது தந்தையும் மாணவியின் ஆன்லைன் கல்விக்கு உதவி புரியும் வகையில் ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கித் தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
கல்லூரி தேர்வுகளில் ஸ்மார்ட்போன் கேட்ட மாணவி சுமார் 94 விழுக்காடு மதிப்பெண் பெற்றுள்ளார். இதையடுத்து அவர் போன் கேட்ட கோரிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதன் பின்னர் பலரும் அந்த மாணவிக்கு உதவி செய்ய முன்வந்தனர். மேலும் அவரது கல்விக்காகவும், அவரது இரு சகோதரிகளின் கல்விக்காகவும் உதவி புரிய பலரும் உதவிக்கரம் நீட்டினர்.
இதன் பிறகு நடிகை டாப்ஸி தாமாக முன்வந்து அந்த மாணவிக்கு ஐ போன் அனுப்புவதாகத் தெரிவித்தார். இது குறித்து அவரது ட்விட்டர் பதிவில், "நமக்கு படிக்க பல பெண்கள் தேவை. நமக்கு ஒவ்வொரு குழந்தையும் படிக்க வேண்டும். நமக்கு பல மருத்துவர்கள் தேவை. நமது தேசத்துக்கு சிறந்த எதிர்காலம் அமைய என்னுடைய சிறிய முயற்சி இது" எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க... கங்கனாவின் பழைய பேட்டியை பகிர்ந்து கலாய்த்த டாப்ஸி