பிரபல நடிகை டாப்ஸி பன்னு நடிப்பில், வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் தப்பட்.
திருமண உறவில் துணைவரின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் குறித்து பேசும் இந்தத் திரைப்படத்தின் முதல் ட்ரெய்லர், கடந்த மாத இறுதியில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது இதன் இரண்டாவது ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில் முந்தைய ட்ரெய்லரில் இடம்பெற்ற டாப்ஸியின் கணவர் அவரை அறையும் காட்சிகளும், அதைத் தொடர்ந்து பார்வையாளர்களுடன் டாப்ஸி உரையாடுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.