தமிழ்நாடு

tamil nadu

வெள்ளாவி வச்சு வெளுத்த நம்ம ஐரின் டாப்ஸி...இப்போ ஓட்டக்காரி!

By

Published : Aug 30, 2019, 7:52 PM IST

நடிகை டாப்ஸி தற்போது தடகள வீராங்கனையின் வாழ்க்கைப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

Taapsee Pannu

சமீபகாலமாக இந்திய திரையுலகில் விளையாட்டை மையப்படுத்தி அதிக படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது நடிகை டாப்ஸி தடகள வீராங்கனை ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்க உள்ள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தமிழ் இயக்குநர் நந்தா பெரியசாமி கதையில் இயக்குநர் ஆகார்ஷ் குரானா இயக்கும் இப்படத்திற்கு 'ராஷ்மி ராக்கெட்' எனப் பெயர் வைத்துள்ளனர். ஒட்டப்பந்தய வீராங்கனையாக டாப்ஸி இதில் நடிக்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட டாப்ஸி, இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 'மிஷன் மங்கள்' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், நடிகை டாப்ஸி நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details