தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வலைப்பயிற்சியில் இறங்கியுள்ள 'சபாஷ் மித்து' டாப்ஸி! - டாப்ஸி பானுவின் படங்கள்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்கான பயிற்சியில் நடிகை டாப்ஸி பானு இறங்கியுள்ளார்.

Taapsee Pannu
Taapsee Pannu

By

Published : Jan 28, 2021, 3:10 PM IST

தடகள வீராங்கனையின் வாழ்க்கை வரலாற்று படமான 'ரஷ்மி ராக்கெட்' படப்பிடிப்பை முடித்துவிட்டு டாப்ஸி பானு தற்போது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் 'சபாஷ் மித்து' படத்திற்கான பயிற்சியில் இறங்கியுள்ளார்.

இப்படத்தில், டாப்ஸி, மிதாலியாக நடிக்கிறார். வையாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ராகுல் தொலகியா இயக்குகிறார்.

கிரிக்கெட் பேட் உடன் மைதானத்தில் சிங்கப்பெண்ணாக டாப்ஸி நிற்பது போன்று வடிவமைக்கப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் சமூகவலைதளத்தில் வைரலானது. தற்போது இந்தப் படத்திற்காக டாப்ஸி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தை தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், பேட் - பந்துடனான காதல் தொடங்கியுள்ளது. நீண்ட தூரம் செல்ல வேண்டும். இது ஒரு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. இது ஒரு மைல்கல். எங்கள் கேப்டன் கூல் மிதாலி ராஜூக்காக... எனப் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details