இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் நடிகை டாப்ஸி பன்னு நடித்துள்ள திரைப்படம் தான் 'தப்பட்'. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள டாப்ஸி படத்தின் ரிலீஸ் தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வரும் பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவித்துள்ள டாப்ஸி படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்பாக அனுபவ் சின்ஹாவுடன் இணைந்து டாப்ஸி நடித்துள்ள 'முல்க்' திரைப்படம் மெகா ஹிட் அடித்தது.