தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘பெரும் துயரில் ஆழ்த்தியது’ - அன்பழகன் மறைவுக்கு டி.ஆர் இரங்கல்

சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

t.ranjendarடிஆர்
t.ranjendarடிஆர்

By

Published : Jun 10, 2020, 6:57 PM IST

Updated : Jun 11, 2020, 1:59 AM IST

கரோனா தொற்றின் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ ஜெ. அன்பழகன் (62) இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரின் மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அன்பழகன் மறைவுக்கு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர் இரங்கல் தெரவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏவும், எங்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உறுப்பினருமான ஜெ.அன்பழகன் இன்று இயற்கை எய்தியதாக வந்த செய்தி எங்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. அவரது குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தி அடையவும், அவர்களது குடும்பம் இதில் இருந்து மீண்டு வரவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், திரைப்பட சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஏ.எல். அழகப்பன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் சென்னை மாவட்ட செயலாளர், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் சங்கங்களின் உறுப்பினர் அன்பழகன் மறைவிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பிலும் ஒட்டுமொத்த தயாரிப்பாளர்கள் சார்பிலும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Last Updated : Jun 11, 2020, 1:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details