சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிரஞ்சீவி, ராம் சரண், நடிகை தமன்னா உள்ளிட்ட படக்குழுவினர், ஏராளமான தமிழ் திரைப்பட இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகன் நான்: ராம் சரண் - விஜய் சேதுபதி
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகன் நான் என்று 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, அப்படத்தின் தயாரிப்பாளர் ராம் சரண் கூறியுள்ளார்.
![விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகன் நான்: ராம் சரண்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4583271-thumbnail-3x2-ram.jpg)
அப்போது பேசிய நடிகர் ராம் சரண், "நான் நடிகர் விஜய்சேதுபதியின் மிகப்பெரிய ரசிகன். '96' திரைப்படம் சிறப்பாக இருந்தது. நான் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தை தயாரிக்க முடிவெடுத்து என் அப்பாவை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து கதாநாயகியாக யாரைப் போடலாம் என்று கேட்டேன். அப்போது அவர் தமன்னாவுடன் நடிக்கிறேன் என்றார். நான் நினைத்தேன் என்னுடன் நடிக்கும் ஹீரோயின் அப்பாவுடன் எப்படி என்று, ஆனால் சினிமாவில் எல்லாம் நடக்கும் என்றார். மூன்று நிமிடம், இப்படத்திற்கு நடிகர் கமல் பிண்ணனியில் பேசினார். அவருக்கு நன்றி. மேலும் நடிகர் அரவிந்த் சாமி என்னை ஏன் நடிக்க கூப்பிடவில்லை எனக் கேட்டார். பெரியவர் சிறியவர் என பார்க்காதவர் சினிமாவை நேசிப்பவர் அவர் இந்த படத்தில் பின்னணி குரல் கொடுத்துள்ளார்" என்றார்.