அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பிகில்’ திரைப்படம் ஆரம்பம் முதலே பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்துவருகிறது. கறிக்கடை தொழிலாளர்கள் பிரச்னை, பூக்கடைத் தொழிலாளர்கள் பிரச்னையைத் தொடர்ந்து விஜய் கிறிஸ்துவ மதத்தைப் பரப்பவந்தவர் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இந்தச் சர்ச்சைக்குக் காரணம் புதிதாக சந்தைக்கு வந்துள்ள ‘பிகில்’ ராயப்பன் உடை.
பிகில் ராயப்பன் உடையுடன் சிலுவை இருப்பதை பதிவிட்டு ஒருவர், விஜய் தனது இந்து ரசிகர்களை மதமாற்ற முயற்சி செய்கிறார். இது பற்றிய உங்கள் கருத்து என்ன? என்று ஹெச். ராஜா, எஸ்.வி. சேகர் ஆகியோரை டேக் செய்துள்ளார்.
இது குறித்து எஸ்.வி. சேகர், "இதை பெரிதுபடுத்துவது சரியல்ல என்பது என் கருத்து. விஜய் ஒரு நல்ல நடிகர். அந்த நடிகரின் ரசிகர்களுக்காக விற்கப்படும் பொருள்கள். இதில் காவி வேட்டி, ருத்திராக்ஷம் கூட இருக்கின்றதே. இதை விற்கும் கடைக்காரர்கள் அனைவரும் மாற்று மதத்தினரா" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் மற்றொரு பதிவில், "முன்பு விஜய் சிலுவை அணிந்திருப்பது குறித்து சர்ச்சை எழுந்ததும், விஜய் விபூதி பூசி நடிக்கும்போது பிடிக்கும் நமக்கு அவர் சிலுவை அணியும்போது பிடிக்காதது சரியல்ல. அவர் எங்காவது பொதுவெளியில் தன் மதத்தை மட்டும் உயர்வாகப் பேசி மற்ற மதத்தைத் தாழ்வாகப் பேசி பார்த்துள்ளீரா. Unity in diversity. WE CELEBRATE THIS" என எஸ்.வி. சேகர் ஆதரவாக பதிவிட்டிருந்ததை மனத்தில் வைத்தே அவரிடம் இந்த பிகில் ஆடை குறித்த கேள்வியை ஒருவர் எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: எங்க ஆட்டம் 'வெறித்தனமா' இருக்கும்... ஆஃபீஸில் 'பிகில்' பாட்டுக்கு ஆடிய ஊழியர்கள்!