தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

டார்ச் லைட் பிரகாசமாக எரிய, நமது பிரதமர் தேவை' -  கமல் டவீட் குறித்து எஸ்.வி.சேகர் பதில்!

பிரதமர் நரேந்திர மோடி டார்ச் அடிக்க சொன்னது குறித்து கமல் ஹாசன் வெளியிட்ட கருத்துக்கு பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் பதிலளித்துள்ளார்.

கமல் டவீட் குறித்து எஸ்.வி.சேகர்
கமல் டவீட் குறித்து எஸ்.வி.சேகர்

By

Published : Apr 4, 2020, 7:40 PM IST

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் நேற்று பிரதமர் பேசியது குறித்து தனது கருத்தை வெளியிட்டிருந்தார். அதில் ‘பிரதமர் விளக்கேற்ற சொன்னது குறித்து கூறியபோது, ‘பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன்.

பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்’ என்று தெரிவித்தார்.

கமலின் இந்தக் கருத்துக்குப் பல்வேறு தரப்பினரிடம் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் கமல் ஹாசனின் இந்தக் கருத்துக்கு எதிராக நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ”சில சமயம் நம்ம படத்துல அதிகம் எதிர்பார்த்து ஏமாந்தது மாதிரி இல்ல இது. வெறும் டார்ச் லைட் கையில இருந்தா போதாது. அது பிரகாசமா எரிய பாட்டரி தேவை.

அதுதான் நம் பிரதமர். இந்த 21 நாள் தேசத்திற்கே ஊரடங்கு. இதில் அரசியல் எதற்கு? உங்கள் ஆலோசனைகளை பிரதமரிடமே தெரிவிக்கலாமே” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவிய லேடி சூப்பர் ஸ்டார்!

ABOUT THE AUTHOR

...view details