சென்னை:குறும்படப் படைப்பாளிகள் சங்கத்தின் சென்னை மண்டல கூட்டம், சாலிகிராமம் சிகரம் ஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இயக்குநர் பேரரசு, நடிகர் ஸ்ரீராம், நடிகை 'கம்பம்' மீனா,உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவுக்கு வருகை தந்த பார்வையாளர்களையும், குறும்பட படைப்பாளிகளையும் குறும்பட படைப்பாளிகள் சங்கத்தின் மாநில செயலாளரான பென்னெட் ஜே ராக்லாண்ட் வரவேற்று, சிறப்புரையாற்றினார்.
‘சுவை ஆறு’ குறும்படத் தொடர்:
குறும்பட படைப்பாளிகள் சங்கத்தின் ஒரு அங்கமான பி ஜே ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் 'சுவை ஆறு' என்ற பெயரில் குறும்பட தொடர் ஒன்று தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உலகிலேயே முதன் முதலாக தயாராகும் குறும்படத் தொடர் இது.
இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து 'சுவை ஆறு' என்ற குறும்பட தொடரை இயக்கும் ஆறு இயக்குநர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பேரரசு சவால்
விழாவில் இயக்குநர் பேரரசு பேசுகையில்,'' முழுநீள திரைப்படங்களை இயக்குவதை விட குறும்படங்களை இயக்குவது சவாலானது. வீரியமான படைப்புகள் தான் குறும்படங்கள்.
அறிஞர் ஒருவர் ஒரு பக்கத்திற்கும் மேலாக கடிதம் ஒன்றை எழுதி விட்டு, அடிக்குறிப்பாக எனக்கு சிந்திக்க நேரமில்லை. அதனால் சுருக்கமாக எழுத முடியவில்லை என்று எழுதினார். அதைப் போன்றதுதான் குறும்படங்கள்.
'சுவை ஆறு’ குறும்படத் தொடர் அறிமுக விழா கால அவகாசத்தில் குறைவாக இருந்தாலும் படைப்பாளி,பார்வையாளனுக்கு கடத்த வேண்டிய விசயத்தை துல்லியமாக சொல்வதுதான் குறும்படம். குறும்பட படைப்பாளிகள் சங்கத்திற்கு எனது வாழ்த்துக்கள்.'' என்றார்.
'சுவை ஆறு’ குறும்படத் தொடர் அறிமுக விழா இந்த கூட்டத்தில் சென்னை மண்டல குழு படைப்பாளிகள் சங்க தலைவராக கணேஷ் ராஜ், துணை தலைவராக திருக்குமரன், செயலாளராக கே. வி. ஆர். கோபி, துணைச் செயலாளராக சிவராம், பொருளாளராக ஜெயசூர்யா ஒருங்கிணைப்பாளராக செந்தில் குமரன் நிஷாந்த் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.
'சுவை ஆறு’ குறும்படத் தொடர் அறிமுக விழா இதையும் படிங்க:மாநாடு 25ஆவது நாள் - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நன்றி!