தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மகான்கள் இல்லாததால் நாடு மோசமாக உள்ளது - இயக்குநர் மிஷ்கின் - விக்ராந்த்

'சுட்டு பிடிக்க உத்தரவு' படத்தின் போஸ்டர் தனக்கு பிடிக்கவில்லை என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

File pic

By

Published : Jun 11, 2019, 5:17 PM IST

இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில், நடிகர் விக்ராந்த், இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன் இணைந்து நடித்துள்ள படம் ’சுட்டுப்பிடிக்க உத்தரவு’. இப்படத்தில் அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கல்பதரு பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் ஜூன் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன் அதுல்யா ரவி, படத்தின் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது ராம்பிரகாஷ் ராயப்பா கூறியதாவது:

'சுட்டு பிடிக்க உத்தரவு' படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதத் தொடங்கியபோது, இயக்குநர் மிஷ்கின்தான் இந்தக் கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று எழுதினேன். அவர் இந்தப் படத்தில் நடிப்பாரா, இல்லையா என்ற சந்தேகம் எனக்கு அதிகமாக இருந்தது.

ஆச்சரியம் என்னவென்றால், இரண்டே நிமிடங்கள் ஒன் லைன் ஸ்டோரி கேட்டவுடன் இந்தப் படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார். இதுபோன்று, மற்றொரு கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் இயக்குநர் சுசீந்திரன் நடிக்க வேண்டும் என அவரை அணுகினோம். அவரும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

சுட்டு பிடிக்க உத்தரவு பத்திரிகையாளர் சந்திப்பு

இப்படத்தில் பாடல்கள் இல்லை. பார்வையாளர்களிடமிருந்து ஒரு நல்ல வரவேற்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒரு சிறந்த படத்தை உங்களுக்கு வழங்க முயற்சித்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில், 'ராம்பிரகாஷ் ராயப்பாவின் "தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்" படம் பார்த்ததிலிருந்து நான் அவருடைய ரசிகனாக மாறிவிட்டேன். இந்தப் படத்தில் அதிக அளவில் ஸ்டண்ட் காட்சிகள் உள்ளன. நான் நடித்த ஒரு சில காட்சிகளை பார்க்கும் பொழுது எனக்கே பிரமிப்பாக இருந்தது.

இந்தப் படம் முழுக்க மக்கள் நடமாட்டம் உள்ள பரபரப்பான இடத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தினந்தோறும் மல்டி கேமராக்கள் பயன்படுத்திதான் படப்பிடிப்பு நடத்தினார்கள். இந்தப் படத்தில் 'சவுண்ட் எபெக்ட்ஸ்'க்கு ஒரு நல்ல முக்கியத்துவம் உள்ளது' என்றார்.

இவர்களைத் தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் பேசுகையில்,

'ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிக்க நான் விரும்பவில்லை. ஆனால் ராயப்பனின் இரண்டு நிமிட கதை கேட்ட பிறகு நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்தப் படப்பிடிப்பு பணியில் ஒரு இயக்குநராக நான் எந்தத் தலையீடும் செய்யவில்லை.

இயக்குநர் என்ன கூறினாரோ அதைக் கேட்டு நான் நடித்தேன். இயக்குநர் சுசீந்திரன் எப்பொழுதும் மற்றவர்களை கலகலப்பாக வைத்துக் கொள்வார். ஆனால் அவருக்கு என்ன பிரச்னை இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அதை வெளியில் காட்டாமல் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதில் கவனமாக இருப்பார்.

நடிகர் விக்ராந்துக்கு இப்படம் ஒரு திருப்புமுனையாக அமையும். இந்தப் படத்தில் எனக்கு பிடிக்காதது ஒன்று இந்த போஸ்டர்தான். இந்தப் போஸ்டரில் காந்தி தலையை விட என் தலையை மிகப்பெரியதாக போட்டிருக்கிறார்கள். மகாத்மா காந்தி மிகப்பெரிய மகான் நான் சிறியவன்.

நாட்டில் தற்போது, மகான்கள் கிடையாது அதனால் தான் நாடு மோசமாக உள்ளது. ஒரு வீட்டில் ஒரு மகான் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்' என்று அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details