கோலிவுட்டில் 'ரட்சகன்' படத்தில் நாகார்ஜுனாவிற்கு ஜோடியாக நடித்தவர் சுஷ்மிதா சென் (46). இதனையடுத்து ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியான, 'முதல்வன்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
இவர் தற்போது ஆர்யா 2 வெப் தொடரில் நடித்துவருகிறார். மிஸ் யுனிவர்ஸ் அழகிப் பட்டம் வென்ற முதல் இந்திய பெண்ணான இவர், இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துவருகிறார்.
இந்நிலையில் சுஷ்மிதா சென் தன்னைவிட 15 வயது குறைந்த ரோஹ்மன் ஷால் என்பவரை காதலித்துவந்தார். இருவரும் ஜோடியாக சுற்றிய நிலையில், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது.