பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் குறித்து மும்பை, பீகார் காவல் துறையினர் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
"சுஷாந்த் மரணத்தில் பல்வேறு விஷயங்கள் வெளிவரும்" - சுப்பிரமணியன் சுவாமி - sushant singh rajput latest news
சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில் சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சுஷாந்த் சிங் மரணம் குறித்து பல்வேறு விஷயங்கள் விசாரணையில் வெளிவரும். குற்றவாளிகள் நீதித்துறை முன்பு நிற்க வைக்கப்படுவார்கள் அல்லது நீதித்துறை குற்றவாளிக் கூண்டில் நிற்க வாய்ப்பு உள்ளது" என்று கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, சுப்பிரமணியன் சுவாமி ”சுஷாந்த் மரணித்த அன்று அவர் வீட்டுக்கு எதற்காக இரண்டு ஆம்புலன்ஸ் வந்தது? அதேபோல் சுஷாந்த் வீட்டின் வேலைக்காரர் எதற்காகக் காணாமல் போனார்? இதற்கான விடைகள் இன்னும் கிடைக்கவில்லை" என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.