தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சுஷாந்த் இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவன்! - சுஷாந்த் சிங் தற்கொலை

நடிகர் சுஷாந்த் சிங் இறந்த சோகத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

By

Published : Jun 23, 2020, 2:38 AM IST

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் மன அழுத்தத்தால் கடந்த 14ஆம் தேதி தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் திரைத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் மரணச் செய்தியை உத்தரப் பிரதேச மாநிலம் ஆப்பூர் பகுதியை சேர்ந்த பத்தாவது படிக்கும் மாணவன் தொலைக்காட்சியில் பார்த்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குடும்பத்தாரின் வேண்டுதலுக்கு இணங்க அச்சிறுவனின் உடலை உடற்கூறாய்வு செய்யவில்லை.

காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் அச்சிறுவன் தனது புத்தகத்தில், "அவரால் முடியும்போது. என்னால் முடியாதா என்ன" என்று எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது.

குழந்தைகள் இம்மாதிரியான சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்க்காமல் பெற்றோர்கள் கவனித்துக் கொள்ளுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்

ABOUT THE AUTHOR

...view details