நடிகர் சுஷாந்த் சிங், உயிரிழந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியுள்ளது. ஆனால், அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. இதுவரை சுஷாந்த் தற்கொலை சம்பவம் தொடர்பாக, அவரது காதலி ரியா சக்ரபர்த்தி உட்பட்ட 30க்கும் மேற்பட்டவர்களை மும்பை காவல் துறையினர் விசாரணை செய்தனர்.
வாட்ஸ் அப் டிஸ்ப்ளே பிக்சரில் சுஷாந்த்- வெளியானது ரியாவின் ரகசியம்! - Latest cinema news
நடிகை ரியா சக்ரபர்த்தி, சுஷாந்த் சிங்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தனது வாட்ஸ் அப் டிஸ்ப்ளே பிக்சராக வைத்துள்ளார்.
![வாட்ஸ் அப் டிஸ்ப்ளே பிக்சரில் சுஷாந்த்- வெளியானது ரியாவின் ரகசியம்! Sushanth](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11:23:35:1594706015-8017578-172-8017578-1594704208149.jpg)
Sushanth
இந்நிலையில், சுஷாந்த் மறைவைத் தாங்க முடியாத ரியா சக்ரபர்த்தி தனது வாட்ஸ் அப் முகப்பில் (DP) அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைத்துள்ளார். அப்புகைப்படம் அவரின் நெருக்கமாக இருக்கும் நண்பரிடம் இருந்து சமூக வலைத்தளங்களில் வெளியானது. இருவரும் நெருக்கமாக இருக்கும் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
சுஷாந்த் சிங் நடிப்பில் உருவாகியுள்ள, 'தில் பேச்சரா' திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.