பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், ஜூன் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணம் திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரின் தற்கொலைக்குக் காரணம், திரைத்துறையில் இருக்கும் வாரிசு அரசியல், பின்புலம் இல்லாமல் சினிமா துறைக்குள் வருபவர்களை நடிக்க விடுவதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து, மேலாளர் ரேஷ்மா ஷெட்டியை மும்பை காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர்.