தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பத்மஸ்ரீ விருதைத் திருப்பிக் கொடுக்கிறேன்' - நடிகை கங்கனா காட்டம்! - சுஷாந்த் சிங் மரணம்

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் தான் கூறிய கருத்துக்களை நிரூபிக்க முடியவில்லை எனில் தன்னுடைய பத்மஸ்ரீ விருதைத் திருப்பிக் கொடுப்பதாக, நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

Sushanth
Sushanth

By

Published : Jul 18, 2020, 9:57 PM IST

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், கடந்த ஜூன் 14ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலையில் மர்மங்கள் இருப்பதால், அதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்ய வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் பாலிவுட்டில் நிலவிவரும் வாரிசு அரசியல் காரணமாகத் தான், சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார் என்றும், இதுதொடர்பாக மும்பை காவல்துறையினர் தன்னை விசாரணை செய்யலாம் என்றும், நடிகை கங்கனா ரனாவத் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில், இதுகுறித்து கங்கனா ரனாவத் பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்குப் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், "நான் பேசிய வீடியோவைப் பார்த்து மும்பை காவல்துறையினர் என்னை விசாரணைக்காக அழைத்தனர்.

ஆனால் அப்போது என்னால் செல்ல முடியவில்லை. அதற்குப் பிறகு அவர்களும் என்னை அணுகவில்லை. என்னால் ஒரு விஷயத்தை நிரூபிக்க முடியவில்லை என்றால், அதுகுறித்து பொதுவாக நான் பேசமாட்டேன்.

சுஷாந்த்தின் மரணம் குறித்துப் பேசுவதும், அப்படி தான். ஒருவேலை நான் கூறிய கருத்துக்களை என்னால் நிரூபிக்க முடியாமல் போனால், எனக்கு கொடுத்த பத்மஸ்ரீ விருதைத் திருப்பிக் கொடுக்கிறேன்.

அதற்கு நான் தகுதி அற்றவளாகக் கருதிக் கொள்வேன். ஆதாரம் இல்லாமல் பொது வெளியில் ஒரு கருத்தை வெளியிடக்கூடியவள் நான் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details