தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சுஷாந்த் சிங் தற்கொலை: சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் மீது பாஜக புகார்! - Latest cinema news

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பின்னணியில், திரைத்துறையைச் சேர்ந்த எட்டு பேர் இருப்பதாகக்கூறி பாஜகவைச் சேர்ந்த ஒருவர், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

By

Published : Jul 2, 2020, 4:35 PM IST

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி தனது வீட்டில், மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுஷாந்த்தின் தற்கொலைக்குக் காரணம், திரைத்துறையில் இருக்கும் வாரிசு அரசியல், பின்புலம் இல்லாமல் சினிமா துறைக்குள் வருபவர்களை வாரிசு நடிகர்கள் படங்களில் நடிக்க விடுவதில்லை என்று பல்வேறு சர்ச்சைகள் பாலிவுட்டில் எழுந்துள்ளது.

இந்நிலையில், பாஜக கட்சியைச் சேர்ந்த அஜித் குமார், பிகார் மாநிலம் வைஷாலி மாவட்ட நீதிமன்றத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில், இயக்குநர் கரண் ஜோஹர், சல்மான் கான், சஜித் நதியாட்வாலா உள்ளிட்ட எட்டு பேருக்குத் தொடர்பு இருப்பதாகக்கூறி வழக்கு தொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "காந்தி வழியில் போராடி, சுஷாந்த் மறைவுக்கு நீதி வாங்கி கொடுப்போம். இந்த வழக்கின் விசாரணை ஜூலை 8ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

முன்னதாக, வழக்கறிஞர் சுதிர் குமார், சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது குறித்து முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சுஷாந்த் சிங் குறித்து மனம் திறந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்!

ABOUT THE AUTHOR

...view details