சுசீந்திரன் இயக்கத்தில், ஜெய் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 'வீரபாண்டியபுரம்'. இதில் மீனாட்சி, பால சரவணன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஜெய் முதல்முதலாக இசையமைத்துள்ள இத்திரைப்படம் நேற்று (பிப்ரவரி 18) திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் 'வீரபாண்டியபுரம்' குறித்து இயக்குநர் சுசீந்திரன் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இதுவரை ஜெய் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்த படங்கள் மட்டுமே வெற்றிபெற்றன. தனி நாயகனாக நடித்த படங்கள் எதுவும் வெற்றிபெறவில்லை எனக் கூறுகின்றனர்.