சுசீந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானப் படம் கென்னடி கிளப். பெண்கள் கபடியை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் சசிகுமார், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்நிலையில், சுசீந்திரன் கால்பந்தை மையமாக வைத்து சாம்பியன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நரேன், இந்தியன் கால்பந்து டீம் கேப்டன் ராமன் விஜயன் நடித்துள்ளனர். அதே போல் கதாநாயகனின் அப்பாவாக பாரதிராஜவின் மகன் மனோஜ் நடித்துள்ளார். அரோல் கொரல்லி இசையமைக்கிறார்.
இப்படத்தில் சுசீந்திரன் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மியூஸிக் ரியாலிட்டி ஷோவில் பங்குபெற்ற கார்த்திக் என்ற மனம் நலம் குன்றிய இளைஞரை பாடகராக அறிமுகப்படுத்தியுள்ளார். கவிஞர் விவேகாவின் பாடல் வரிகளான