தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 25, 2019, 1:24 PM IST

ETV Bharat / sitara

குழந்தைகளின் பெற்றோரை விவாதத்திற்கு அழைக்கும் நடிகர் சூர்யா

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்காமல், கருத்து தெரிவிக்காமல் அமைதியாக செல்கிறோம். இது நமது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று கூறும் நடிகர் சூர்யா, குழந்தைகளின் பெற்றோரை விவாதத்துக்கு அழைத்துள்ளார்.

நடிகர் சூர்யா

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஜூன் 30ஆம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மும்மொழிக்கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு கட்டாயம் இந்தி கற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மும்மொழிக் கொள்கையை நீக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் சூர்யா தேசிய கல்விக் கொள்கை குறித்து தெரிந்து கொண்டு, அதில் நல்லவை எது, கெட்டவை எது என்பதை தெரிந்துகொள்ள பொதுமக்களை விவாதத்துக்கு அழைத்துள்ளார்

இது குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், 'அனைவருக்கும் வணக்கம் 30 கோடி மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் போகிற கல்விக் கொள்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதைப்பற்றிய உரையாடல்களோ, விவாதங்களோ இன்னும் போதிய கவனம் பெறவில்லை. அனைவருக்கும் சமமான கல்வியை வழங்க என்ன செய்ய வேண்டும்? உயர்கல்வி படிக்கத் தகுதித் தேர்வு அவசியமா? கல்வி கற்பிக்கிற மொழிக் கொள்கையில் போதிய தெளிவு இருக்கிறதா?

குழந்தைகளின் எதிர்காலத்தோடு ஏற்புடைய இதுபோன்ற பல கேள்விகளுக்கு கல்வி கொள்கையின் பதில் என்ன? நம் எல்லோருக்கும் கல்வி பற்றிய கருத்துகள் உண்டு. ஆனால் கல்விக்கொள்கைப் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தாமல், நம் கருத்துகளை முன்வைக்காமல் அமைதியாக கடந்துவிடுகிறோம். அந்த 'அமைதி' நமது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும்.

கல்விக்காக தங்களது வாழ்வையே அர்ப்பணிக்கிற பெற்றோர் புதிய கல்விக் கொள்கைப் பற்றி படித்து தெரிந்துகொள்வது அவசியம். ஜூன் 30ஆம் தேதிக்குள் ஆக்கப்பூர்வமான பதில்களை கேட்டறிந்து நமது குழந்தைகளின் எதிர்காலத்தை காப்போம்' எனப் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details