சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இமான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இம்மாதம் 10ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இன்று இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சூர்யா..! இவ்விழாவில் நடிகர் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவின் படம் திரையரங்கில் வெளியாவதால் அவரது ரசிகர்களும் இவ்விழாவிற்குத் திரண்டு வந்திருந்தனர். விழா முடிந்து சூர்யா வெளியேறும்போது அவரது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு படக்குழுவினர் அவரை பத்திரமாக மீட்டு காருக்கு அழைத்துச் சென்றனர்.
இதேபோல் படக்குழுவினரையும் ரசிகர்கள் புகைப்படம் எடுக்க சூழ்ந்துகொண்டதால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். ஒருவழியாக கூட்ட நெரிசலில் இருந்து தப்பித்தால் போதும் சாமி என்று திரைப்பிரபலங்கள் காருக்கு ஓட்டம் பிடித்தனர்.
இதையும் படிங்க:கன் ஷாட்டுடன் நிறைவடைந்த விக்ரம் படப்பிடிப்பு