தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாலா படத்தின் டீசரை வெளியிட்ட சூர்யா! - starring RK Suresh visithiran

இயக்குநர் பாலா தயாரிப்பில் ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ள 'விசித்திரன்' படத்தின் டீசரை நடிகர் சூர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

visithiran
visithiran

By

Published : Jan 1, 2021, 3:08 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் பாலா, பி ஸ்டுடியோஸ் பெயரில் தரமான படங்களைத் தயாரித்துவருகிறார். அந்த வகையில் 2018ஆம் ஆண்டு மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஜோசப் என்ற படத்தை தமிழ் ரீமேக்காகத் தயாரித்துள்ளார்.

தமிழில் 'விசித்திரன்' என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் ஆர்.கே. சுரேஷ், பூர்னா, மதுஷாலினி உள்ளிட்ட திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். நடுத்தர வயதுள்ள நபராக ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ளார்.

தன்னிடமிருந்து பிரிந்துசென்ற மனைவி விபத்தில் இறந்துவிட, அது விபத்து அல்ல கொலை என்பதை கண்டுபிடிக்கும் மிரட்டலான நடிப்பில் ஓய்வுபெற்ற காவல் துறை அலுவலராக 'ஜோசப்' படம் உருவானது.

கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் விசித்திரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். அதில், ஆர்.கே. சுரேஷின் கெட்டப் பாராட்டுகளைப் பெற்றது. மலையாளத்தில் 'ஜோசப்' படத்தை இயக்கிய பத்குமாரே தமிழிலும் இயக்கியுள்ளார்.

ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விசித்திரன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது.

இந்நிலையில், புத்தாண்டு தினத்தையொட்டி நடிகர் சூர்யா விசித்திரன் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். படத்தின் டீசரை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

இதையும் படிங்க:கண்ணும் கண்ணும் நோக்கிய ரொமாண்டிக் லுக்! விக்னேஷ் சிவன் - நயன் நியூ இயர் ஷேரிங்

ABOUT THE AUTHOR

...view details