அகரம் ட்ரஸ்ட்டின் மூலமாக படிக்க விரும்பும் பொருளாதார தடையுள்ள மாணவர்களுக்கு உதவிவரும் நடிகர் சூர்யா குடும்பத்தினர், திரைத்துறை கலைஞர்களுக்கும் தங்களால் இயன்றதை அவ்வப்போது செய்துவருகின்றனர். அந்தவகையில் தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்துக்கு சூர்யா சிறப்பு நிதி அளித்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் சங்கத்துக்கு சூர்யாவின் தீபாவளி பரிசு!
தீபாவளி வருவதை முன்னிட்டு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்துக்கு நடிகர் சூர்யா சிறப்பு நிதி அளித்துள்ளார்.
surya gave 10lakh to TN director association
தீபாவளி சிறப்பு நிதியாக சூர்யா ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அதனை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.வி. உதயகுமார் பெற்றுக்கொண்டார்.
சூர்யா தனது ‘சூரரைப் போற்று’ படத்தின் வெளியீடுக்காக காத்திருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.