சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிகராக மட்டுமின்றி, தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் பட நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில், 2டி நிறுவனம் இன்று (ஆக.25) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது.
2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட் பண மோசடியில் ஈடுபடும் போலி கும்பல்
அதில், “எங்களது நிறுவனத்தின் லோகோவைப் பயன்படுத்தி போலியான மெயில் ஐடியை மோசடி நபர்கள் உருவாக்கியுள்ளனர். அதில் இருந்து புதிய படம் தயாரிப்பதாகவும், அதற்காக நடிகர், நடிகையர் தேவை எனவும் விளம்பரம் கொடுத்து பண மோசடியில் ஈடுபடுகின்றனர் என்ற தகவல் தற்போது எங்களுக்கு தெரியவந்துள்ளது. இதில் இருந்து விழிப்புணர்வுடன் இருங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'தல' அஜித்துடன் ரஷ்யா பறந்த 'வலிமை' டீம்!