நடிகை வனிதா பீட்டர்பால் என்பவரை மறுமணம் செய்துள்ளார். இதனால் வனிதாவின் திருமணம் குறித்து விமர்சனம் செய்து யூடியூப்பில் சூர்யா தேவி என்பவர் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் நடிகை வனிதா தன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோவை வெளியிட்டு வரும் சூர்யா தேவி மீது நடவடிக்கை எடுக்க கோரி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் செல்போனில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், சூர்யா தேவி கஞ்சா வியாபாரம் செய்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தன்னை கஞ்சா வியாபாரி என பொய்யான தகவல்களை பரப்பி வரும் நடிகை வனிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூர்யா தேவியும் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு (ஜூலை 23) சூர்யா தேவி மீது கொலை மிரட்டல், அவதூறு பரப்புதல் என இரு பிரிவுகளில் கீழ் வழக்குபதிவு செய்து காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சூர்யா தேவிக்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
வனிதா மன்னிப்பு கேட்கும் வரை வீடியோ வெளியிடுவேன் -சூர்யா தேவி பரப்பரப்பு பேட்டி! இந்நிலையில் பிணையில் வந்த சூர்யா தேவி கூறியதாவது, “காவல் துறையினர் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். தன்னை கஞ்சா வியாபாரி என பொய்யான தகவல்களை பரப்பியதற்காக வனிதா மீது காவல் துறையில் புகார் அளித்திருந்தேன். ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் வனிதா அளித்த புகாரின் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து தன்னை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது.
கஞ்சா வியாபாரி என கூறிய வனிதா தன்னிடம் மன்னிப்பு கேட்கும் வரையில் தொடர்ந்து அவரை குறித்து வீடியோவை வெளியிடுவேன்” என்றார்.
இதையும் படிங்க...'என் 63 வருட சர்வீஸில் இப்படியொரு மோசமான நிலையை எதிர்கொண்டதில்லை' சிவப்புச் சட்டைக்காரர்களின் வேதனைப் பதிவு