நடிகர் சூர்யா, சுதா கொங்கரா இயக்கும் ’சூரரைப் போற்று’ படத்தில் நடித்துவருகிறார். இதையடுத்து அவர், சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
’சூர்யா 39’ படத்தின் டீம் அறிவிப்பு - சூர்யா 39
சூர்யா 39 படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தான வீடியோவை, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் சூர்யாவின் 39ஆவது படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கிறது. இதுபற்றிய தகவல் சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில், இயக்குநர் சிவாவின் பிறந்த நாளான இன்று படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரத்தை தயாரிப்பு நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.
அதில், டி.இமான் இசையமைப்பாளராகவும், வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் படத் தொகுப்பாளராகவும், திலிப் சுப்பராயன் சண்டை பயிற்சியாளராகவும், மிலன் கலை இயக்குனராகவும் பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.