தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆஸ்கரை நெருங்கும் 'சூரரைப் போற்று' ! - லேட்டஸ் தமிழ்சினிமா செய்திகள்

ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் 'சூரரைப் போற்று' திரைப்படம் இடம்பெற்றிருப்பது படக்குழுவினரையும் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

oscar
oscar

By

Published : Feb 26, 2021, 7:03 PM IST

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, ‎அபர்ணா பாலமுரளி நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான திரைப்படம் 'சூரரைப் போற்று'. திரைப்படம் வெளியானதிலிருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்த இந்த படத்தில் பரேஷ் ராவல், மோகன் பாபு, கருணாஸ், ஊர்வசி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஓடிடி தளத்தில் தமிழில் வெளியான பெரிய பட்ஜெட் திரைப்படம் இதுவாகும். சூரரைப் போற்று திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே ரூ. 100 கோடிக்கும் மேல் ப்ரீ பிசினஸ் செய்து 100 கோடி கிளப்பில் இணைந்தது. அதுமட்டுமல்லாது இந்தாண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவில் பொது பிரிவில் தேர்வானது. சமீபத்தில் ஓடிடி தளத்தில் 50 மில்லியன் பேர் பார்த்த படம் என்ற சாதனையை 'சூரரைப் போற்று' பெற்றது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்கர் விருது போட்டியில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம் என மாற்றம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சூழலில் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஆஸ்கர் விருது பொதுப்பிரிவில் 'சூரரைப் போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், பின்னணி இசை போன்ற பிரிவுகளின் கீழ் இத்திரைப்படம் தேர்வாகியது. பொதுப்பிரிவில் போட்டியிட்ட அனைத்து நாடுகளிலிருந்து வந்த 1000 படங்களையும் பார்த்துவிட்டு தற்போது ஆஸ்கர் குழுவினர் இறுதிப் பட்டியலை தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் 366 படங்கள் தேர்வாகியுள்ளது. இதில் 'சூரரைப் போற்று' திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை பிரிவுகளில் இந்த படம் இடம் பிடித்துள்ளது. இதனையடுத்து படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். படக்குழுவினர் மட்டுமல்லாது ரசிகர்களும் சமூகவலைதளத்தில் இதனை கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள படங்களை வாக்குப்பதிவு நடத்தி இறுதிப் பட்டியலை அறவிப்பர்கள். இந்தியாவில் இருந்து தேர்வான ஒரே படமாக சூரரைப் போற்று திரைப்படம் அமைந்துள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள படங்களுக்கான வாக்குப்பதிவு மார்ச் 5ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையடுத்து இறுதிப்பட்டியல் அறிவிக்கப்படும். இதிலிருந்து சிறந்த படம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு இறுதி பரிந்துரை செய்யப்படும். அதிலிருந்து சிறந்த படம், சிறந்த கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படும்.

இந்தாண்டுக்கான ஆஸ்கர் விருது ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறுகிறது. சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு மட்டுமின்றி கோல்டன் குளோப் விருது விழாவில் அயல் மொழி திரைப்பட பிரிவிலும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோல்டன் க்ளோப் விருது நிகழ்ச்சியில் திரையிட 'சூரரைப் போற்று' தேர்வு

ABOUT THE AUTHOR

...view details