'கூட்டத்தில் ஒருவன்' பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், 'ஜெய் பீம்'. சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ள இப்படத்தில், ரெஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் 1993ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இதில் சூர்யா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற சந்துருவின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவர் நீதிபதியாக, இருந்தபோது நடந்த வழக்கில் பழங்குடி பெண்ணிற்கு நீதி பெற்றுத் தந்ததை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இப்படம், தீபாவளி விடுமுறையை முன்னிட்டு வரும் 2ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
சமீபத்தில் 'ஜெய் பீம்' டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்நிலையில் இன்று (அக்.22) ஜெய் பீம் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.