செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் என்.ஜி.கே. இப்படத்தில் இதுவரை இல்லாத மாறுபட்ட வேடங்களில் அரசியல்வாதியாக நடித்துள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
செல்வராகவன், சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள என்ஜிகே திரைப்படம் மே மாதம் 31 ஆம் தேதி வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத்தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்திலும் சூர்யா நடித்து வருகிறார்.