இயக்குநர் ஹலிதா சமீம் நடிகர் சமுத்திரக்கனியை வைத்து ’சில்லுக் கருப்பட்டி’ என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சுனைனா நடித்துள்ளார். இப்படம் நகர பின்னணி கொண்ட நான்கு குறுங்கதைகளைக் கூறும் அந்தாலஜி வகை திரைப்படமாகும். மேலும் இப்படத்தில் லீலா சாம்சன், சாரா அர்ஜூன், மணிகண்டன், நிவேதிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நகரமயமாதலில் சிக்கி கொண்ட'சில்லுக் கருப்பட்டி'யின் மூன்று பருவ காதல் - சில்லுக் கருப்பட்டி பட ட்ரெய்லர்
சமுத்திரக்கனி, சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள சில்லுக் கருப்பட்டி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
sillu karuppatti
டிவைன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெங்கடேஷ் வேலினி தயாரித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வாங்கியிருந்தது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரெய்லரில் மூன்று தலமுறையினரின் காதல்களை காட்சிப்படுத்தியுள்ளனர். டிசம்பர் 27ஆம் தேதி இப்படம் வெளியாகும் ட்ரெய்லரில் அறிவித்துள்ளனர்.