ஜனங்களின் கலைஞன் விவேக் இந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவர் கடைசியாக தொகுத்து வழங்கிய லொல் எனும் காமெடி நிகழ்ச்சி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஆகஸ்ட் 27ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை சூர்யா ஷேர் செய்து விவேக்கை நினைவுகூர்ந்துள்ளார்.
எங்க சிரி பார்ப்போம்: ஜனங்களின் கலைஞனை நினைவுகூர்ந்த சூர்யா
விவேக் தொகுத்து வழங்கிய நகைச்சுவை நிகழ்ச்சியின் டீஸரை சூர்யா ஷேர் செய்துள்ளார்.
suriya tweets on actor vivek
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அவர் என்றும் நம் நெஞ்சில் நிலைத்திருப்பார். நம்மையெல்லாம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த முற்போக்கு கலைஞனின் கடைசி பணியை பகிர்வதில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மீண்டும் இயக்கத்துக்கு திரும்புகிறார் வெற்றிமாறனின் குரு