சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ எனும் நாவலைத் தழுவி அதே பெயரில் வெற்றிமாறன் படம் இயக்கவுள்ளார். சூர்யா இந்தப் படத்தின் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் இதன் டைட்டில் லுக் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. டைட்டில் லுக்கில் இருந்த காளை படம் பொறிக்கப்பட்ட நாணயம் குறித்து சினிமா விமர்சகர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், இந்தப் படத்துக்காக சூர்யா நிஜ காளையுடன் பயிற்சி மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விருமாண்டி படத்தில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு காட்சிக்காக நிஜ காளையுடன் கமல்ஹாசன் பயிற்சி எடுத்திருந்தார். தற்போது ‘வாடிவாசல்’ படத்துக்காக சூர்யா அதே பாணியை பின்பற்றவுள்ளார். தற்போது பாண்டிராஜ் படத்தில் பிஸியாக இருக்கும் சூர்யா, ஆகஸ்ட் மாதம் முதல் வாடிவாசல் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்.