அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சிபெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்குச் சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் செப்டம்பர் 15ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.
'அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு' - நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா...!
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, "அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழ்நாடு அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மாணவர்களுக்கு துணை நிற்போம்... ஒன்றிணைந்து செயல்படுவோம்..." என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க...மருத்துவ பட்டப்படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு... சம நீதி வழங்க இது வழிவகுக்கும்!